fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரெமோ இயக்குநருடன் இணையும் கார்த்தி

தற்போது நடிகர் கார்த்தி நடித்த தேவ் திரைப்படம் திரை அரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.  மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்பொழுது நடித்து வருகிறார். 

அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.  நடிகர் கார்த்தியின் 19 வது படமாக உருவாகின்ற இப்படத்தில் முதற்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்

இப்படத்தில் பணி ஆற்ற உள்ள கலைஞர்கள் குறித்த விவரமும் வெளியாகி இருக்கின்றது.  கார்த்தியின் ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னர் கூறி இருந்தனர்.  தற்போது அதனை படக்குழு உறுதி செய்துள்ளது.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது.  இதற்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 

     இத்திரைப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.  இந்த திரைப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

Related posts

படத்திற்காக விஜய் பெயரை கேட்டு வாங்கிய பிரபல நடிகர்

N N

இன்று வெளியாகும் தர்பார் படத்தின் அப்டேட்

N N

பெண்கள் ஒன்றும் பணம் சுரண்டுபவர் அல்ல” பிரபல நடிகை டாப்ஸி ஆதங்கம்..!

TamilTwin India