காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 55 வயதான குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த- 17 ஆம் திகதி திடீர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி குடும்பஸ்தர் மறுநாள் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றிருந்தார்.
இந்நிலையில் காய்ச்சல் குணமடையாத காரணத்தால் கடந்த- 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், மேற்படி குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்(21) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த மயில்வாகனம் தங்கேஸ்வரன்(வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.