fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
வாழ்க்கை

காதலர் தினம் முடித்தாலும் அதன் அலைகள் இன்னும் ஓயவில்லை..

மத்திய பிரதேச மாநிலம், இண்டோர்ரை சேர்ந்தவர் ஜுனைத் கான். இரண்டு வருடங்களாக ஒருவரை காதலித்து வந்தார். இவர் காதலை கடந்த இருபது நாட்களுக்கு முன் வெளிப்படுத்தினர் . அங்கும் பச்சை கொடி அசைக்க காதல் கதை சக்ஸஸ் என்று நினைக்கும் போது, ஜுனைத் தரப்பில் இருந்து ஒரு பெரிய எதிர்ப்பு வந்தது.

காதல் என்று வந்தால், எதிர்ப்பு வருவது சகஜம் என்றாலும், இவரின் காதலுக்கு தடையாக அமைந்தது பாலினம். ஆம்,  அவர் காதலிக்கும் ஜெயா சிங் என்பவர் திருநங்கை.

அதனால், ஜுனைத் குடுபத்தார் ஏற்று கொள்ளவில்லை. ஆகையால் இருவரும் கடந்து பிப்ரவரி 14, கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் கோவிலில் இந்து முறை படி தாலி கட்டு மனைவியாக ஏற்று கொண்டார். இருவரும் இஸ்லாமிய முறைப்படி நிக்காஹ் செய்து கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.

ஜுனைத் கூறுவதாவது, “ஜெயாவின் அன்புள்ளம் அறிந்து என் குடும்பத்தில் ஏற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டாலும், நான் ஜெயாவை சந்தோசமாக வைத்து கொள்வேன் ” என்கிறார். ஜெயா கூறுகையில்,  “அவர் குடும்பத்தை மீறி என்னை திருமணம் செய்துள்ளார். இருந்தும், அவரின் பெற்றோர் எங்களை ஏற்று கொள்ள வேண்டும்.அவர்களுக்கு சேவை செய்ய நான் காத்திருக்கிறேன். “

சட்டம், திருமணம் செய்ய எதிர் பலனினமே தேவை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால், காதல் எப்போதுமே தடைகளை சந்தித்து கொண்டே இருக்கிறது.

மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டியது – “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்….  “

Related posts

மூட்டுப்பகுதியை வலுப்படுத்தும் நடராஜ ஆசனம்

N N

கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்வது எப்படி

N N

தோள்பட்டையை வலிமைப்படுத்தும் பர்வத ஆசனம்

N N