fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

மண மணக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள், இது சாதாரண மஞ்சளை விட அதிக அளவில் மணம் வீசக் கூடியது.  இது சரும பிரச்சனைகளுக்கு ஏற்றது.  இது மணம் தரக்கூடிய வாசனைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.  பெண்களுக்கு ஆண்களைப் போலவே மேல் உதட்டில் முடி வளரும், இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மீண்டும் முடி வளர விடாமல் தவிர்ப்பதற்கும் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.  இதை உபயோகப்படுத்தி வந்தால் முகம் பொலிவு ஏற்ப்படுவதை காணலாம்.

மண மணக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சளை முகத்தினை அழகுபடுத்துவதற்கு மட்டும் இன்றி நோய்களை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.  கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடி செய்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் அனைத்தும் நீக்கம் அடையும்.  இதை வெங்காயச் சாறு உடன் சேர்த்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.  சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும் மற்றும் முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

Related posts

பாதங்களை அழகாக்கும் இயற்கை பொருட்கள்

N N

தலைமுடியினைக் கொத்து கொத்தாக வளரச் செய்யும் கரிசலாங்கண்ணி ஹேர்பேக்!!

N N

முடி உதிர்வை தடுக்கும் வெங்காயச் சாறு

N N