fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும்-12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்களின் மூலமாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இதற்கான விண்ணப்பங்களை உரிய வகையிலும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் வெளியாகியுள்ள க. பொ. த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 71.66 வீதமானோர் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Related posts

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

SL News

வரலாற்றுத் தோல்வியை எதிர்கொள்ள தயார்: சிறீதரன் அதிரடி!

TamilTwin

குண்டுத் தாக்குதல்களின் எதிரொலி: யாழ். வடமராட்சியில் பாரிய தேடுதல்!!

TamilTwin