கத்திப்பாரா மேம்பாலம், இது போக்குவரத்து நெருக்கடியினை குறைப்பதற்காக கிண்டியில் 2008 – ம் ஆண்டு தமிழக அரசால் திறக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 45, உள்வட்ட சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை போன்ற முக்கியமான சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது கத்திப்பாரா மேம்பாலம். மெட்ரோ ரெயில் வழித்தடம் கத்திப்பாரா மேம்பாலத்தின் அருகே அமைந்து உள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு அருகே அமைந்து உள்ளது. மெட்ரோ பயணிகள், மின்சார ரயில் பயணிகள், பேருந்து பயணிகள் என அனைவரும் பயன் அடையும் வகையில் கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் காலியாக இருக்கக் கூடிய இடங்களில் ரூபாய் 14 கோடி செலவில் சிறப்பு வசதிகளை செய்து முடிக்க மெட்ரோ நிறுவனகம் முடிவு எடுத்து உள்ளது.

கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் 5.85 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு காலியாக உள்ளது. இதில் விளையாட்டுப் பூங்கா, நடைப்பாதை, உணவகம், திறந்தவெளி கலையரங்கம்,. கடைகள், மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடம், கார் நிறுத்தும் இடம், கழிப்பிடங்கள், புல் தரை, அலங்கார விளக்குகள் முதலியவை மூலம் அந்த இடம் நவீனப்படுத்தப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.