
கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார்.
இதற்கமைய குறித்த பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.