உலகமே காதலர் தினம் கொண்டாடிய பிப்ரவரி 14 ஆம் நாள் பாகிஸ்தான் இந்திய ராணுவ வீரர்களை திடீரென தாக்கியது. இந்த திடீர் திருப்பத்தால் நிலைகுலைந்த இந்தியா கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் விமானத்தாக்குதல் நடைபெற்றபோது, விங்க் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் பின்னர் பாகிஸ்தான் அரசு இவரைப் பிடித்து வைத்துக்கொண்டது.
இத்தகைய நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சமரசமாக செல்லவேண்டும் என்று ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார், அதனையடுத்து பாகிஸ்தானின் பிடியில் உள்ள அபிநந்தனை இன்று விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வாகா எல்லையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்தார்.
அபிநந்தனை அழைத்துவர விமானம் அனுப்புவதாக அறிவித்தது இந்திய அரசு ஆனால், பாகிஸ்தானை அதனை ஏற்கவில்லை. மேலும் வர்தமான் வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவாரா இல்லை ரெட்கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவாரா எனத்தெரியாமல் குழம்பியது இந்திய அரசு.
இந்நிலையில் இன்று மாலை வாகா எல்லையில் சரியாக 5.20 க்கு அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டார். எல்லையில் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தனை அதிகாரிகள் இந்தியாவுக்குள் அழைத்துவந்தனர்.
இந்த வீரமகனின் விடுதலையை இந்தியாவே கொண்டாடி வருகிறது..