பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகள் மற்றும் பல திட்டங்களை மக்களிடம் கூறி வருகின்றனர். இத்தேர்தல் குறித்து பல்வேறு பத்திரிக்கைகளும் விமர்சித்து வருகின்றன. கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்தும் இருக்கின்றன. இப்படி இருக்கும் நிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார். தி. மு. க சிறுபான்மை பிரிவு சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் பாபு தலைமை தாங்கி நடத்தினார், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இதில் திண்டுகல் ஐ. லியோனி பேசியதாவது, சூரியனின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் மே மாதத்தில் தான் மாம்பழம் ஆனது பழுக்கும் மற்றும் சூரியன் வந்தால் மட்டுமே தாமரை மலரானது மலரும் எனக் கூறி இருக்கிறார். மேலும் இவர் சூரியனின் ஒளி இல்லை என்றால் தாமரை மலராது மாம்பழமும் குப்பையில் வீசப்படும் எனக் கூறி உள்ளார். தி. மு. க மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார். அவர் கூறுகிறவரே பிரதமர் என பேசி உள்ளார் லியோனி.