fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

எல்.கே.ஜி படம் உருவாகக் காரணம் மிரட்டல் கால்கள் தான்!

ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படம் வெளியாகி மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்தபோது வெளியான மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனையை படைத்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் கதை, திரைக்கதை ஆர்.ஜே.பாலாஜியால் எழுதப்பட்டுள்ளது, அவரே இதற்கு மிகப் பொருத்தமான கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

எல்.கே.ஜி படம் உருவாகக் காரணம் மிரட்டல் கால்கள் தான்

அரசியல் கதை சார்ந்த இந்த படத்தில் நிறைய அரசியல்வாதிகளின் பங்கும் உள்ளது மிகவும் வியப்பானது. முக்கிய அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் வில்லனாக நடித்துள்ளார், அரசியல் தலைவர் ஜே.கே.ரித்தீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இவரின் தந்தையும் அரசியல் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேசன் தயாரிப்பில் வெளிவந்த முதல்படமும் இதுதான். இதில் பெரும்பான்மையான காட்சிகள் தமிழக அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை வித்தியாசமான முறையில் கூறியுள்ளனர்.


மிரட்டல் கால்கள்

இந்த கதை எழுதக்காரணமான பின்னணியை சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டார். அவர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு அரசியல் வாதிகளிடம் இருந்து வந்த எதிர்ப்புகள் பற்றி பேசியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்றதும் மிரட்டல் கால்கள் வந்துள்ளன. இதனால் அவர்க்கு அரசியல் படம் வெளியிட வேண்டும் எனத் தோன்றியதாக கூறினார்.

Related posts

இவரு மியூஸிக்ல அவரு பாடியிருக்காரு, 17 வருடத்துக்கு பிறகு இணைந்த பிரபலம் !

TamilTwin India

தெலுங்கு நடிகருடன் நைட் பார்ட்டியில் டிடி!!

N N

அழகு நிலைய திறப்பு விழாவில் திரை பிரபலங்கள்

TamilTwin India