fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்லாவல மேதானந்த தேரருக்கு தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை சாட்டையடி!!

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட “கிழக்குத் தொல்லியல் பாதுகாப்பு” எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேதானந்த தேரர் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார். தேரரின் இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் எஸ். நிஷாந்தன் இன்று செவ்வாய்க்கிழமை(30) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் அன்று தொட்டுத் தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று உண்மை. இதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இருப்பினும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வேண்டும் என்பதற்காகத் தமிழர் வரலாறுகளை மறைக்க நினைப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையிலே தான் கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் முற்றுமுழுதாக கிழக்கு மாகாணத்தைக் கபளீகரம் செய்ய நினைக்கும் பௌத்த பேரினவாதிகளையும் இவர்களுக்கு உடந்தையாகச் செயற்படும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய உட்பட கிழக்குத் தொல்லியல் பாதுகாப்புச் செயலணியிலுள்ள அனைவரையும் கடுமையாக எதிர்ப்பதுடன் ஒன்றைத் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

வடகிழக்கு தமிழரின் பூர்வீகம் என்பது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் கோஷம் அல்ல அது. ஒட்டு மொத்த தமிழர்களின் மரபுசார் வாழ்வியல் பிரதேசமாகும். இப் பிரதேசத்தை தமிழர்களாகிய எங்களிடமிருந்து சிறிது சிறிதாக பலவழிகளாலும் கபளீகரம் செய்த போது இதை எதிர்த்தும், கண்டித்தும் பல தமிழர்களும், அரசியல்வாதிகளும் அகிம்சை ரீதியாக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

ஆனால், சிங்களப் பேரினவாதிகள் இதை எல்லாம் ஏற்க மறுத்து தங்களது அராஜகங்களை மேலும் அதிகரித்துக் கொண்டு சென்றமையால் தான் மாற்றுவழியாக ஆயுத ரீதியில் தடுத்து நிறுத்திய அன்றைய இளைஞன் தான் இன்றைய எங்களின் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தார் என்னும் எல்லாவல மேதானந்த தேரரின் கருத்தை அடியோடு மறுத்து மாறாக தேசியத் தலைவர் முன்னெடுத்த போராட்டமானது சிங்கள பேரினவாத சக்திகளிடமிருந்து எம் மக்களையும், எம் உரிமைகளையும், எம் மண்ணையும் பாதுகாத்து மீட்டெடுக்கும் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டமேயன்றி தேரர் கூறுவது போன்று பயங்கரவாதச் செயற்பாடு அல்ல. தேரர் அவர்கள் தேவையின்றி உளருவதை நிறுத்த வேண்டும்.

ஆகவே, தற்சமயம் மீண்டும் கிழக்கை கபளீகரம் செய்வதற்காக ஜனாதிபதியால் தனிச் சிங்களவர்களை வைத்து மட்டும் உருவாக்கப்பட்ட கிழக்குத் தொல்லியல் பாதுகாப்புச் செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும். அல்லது இந்த செயலணியில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும். இல்லையல் எதிர்வரும் காலங்களில் இச் செயலணி கலைக்கப்படும் வரை இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடரும் என்பதை நாட்டின் ஜனாதிபதிக்கும், செயலணியிலுள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

எங்கள் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறி விட்டார்!- தூதர் தகவல்

World News

கேரளாவில் புதுமை: ஹோட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்!! (Video)

TamilTwin

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரே சுயாதீனக் குழுவின் கொள்கைத் தெரிவு

World News