தனுஷ் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக இருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் ரிலீஸ் தேதி நீண்ட நாட்களாக தள்ளிக் கொண்டே செல்கிறது. இப்படத்தினை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து உள்ளார். 2016 – ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில் கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. தயாரிப்பு நிறுவன தரப்பில் “முந்தைய படங்களுக்கு வாங்கிய கடனால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

இப்படத்தின் பிரச்சனைகள் குறித்து விநியோகஸ்தர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டு என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மார்ச் மாதம் இறுதியில் திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் 28 – ம் தேதி இது ரிலீஸாகப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.