fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தன்
செய்திகள்

எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தன்

     இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்று குவித்ததன் தீவிரம் இன்னும் அடங்கியதாக தெரியவில்லை.  பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவிற்க்குள் ஊடுருவி உள்ளன.  இந்திய ராணுவம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து உள்ளது.   அப்போது பாகிஸ்தான் இந்திய விமானத்தை சுட்டது, அதில் ஒரு விமானம் பாகிஸ்தானிற்குள் விழுந்தது.  நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டுள்ளது.  அந்த விமானத்தின் பைலட் இப்பொழுது பாகிஸ்தான் பிடியில் உள்ளார். 

     இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்து உள்ளது. அதிலிருந்து பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உள்ளார்.  கீழே குதித்த பிறகு அது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்ற குழப்பம் ஏற்ப்பட்டு உள்ளது.  அபிநந்தன் கீழே குதித்ததை பார்த்து விட்டு அப்பகுதி மக்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.  அவர் அங்கு இருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா பாகிஸ்தானா என்று கேட்டு உள்ளார் அபினந்தன், அவர்கள் பாகிஸ்தான் என்று கூறி அபிநந்தனை தாக்க முயன்றுள்ளனர். 

     எதிரிகள் மத்தியில் அபினந்தன் இருந்தாலும் அவர் நெஞ்சுறுதியுடன் துணிவுடன் நின்று செயல்பட்டார்.  விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம் ஆகும். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி அவர் சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். அப்படி இருந்தும் அவர் வீரத்தை கைவிடாமல் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார். அவரை அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் அபினந்தனை ஒப்படைத்தனர்.

Related posts

சிவத்தமிழ்ச் செல்வியின் 95 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா நாளை

TamilTwin

கொரோனா பீதி!- மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஹூண்டாய் கார் கம்பெனி (Video)

World News

யாழ்.நவாலியில் வீடு புகுந்து வாள்வெட்டு: பாடசாலை மாணவன் படுகாயம்!!

TamilTwin