fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஊரடங்கு நாளிலும் யாழ்.கருகம்பனையில் மாபெரும் இரத்ததான முகாம்: குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு!

கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 12 ஆவது மாபெரும் இரத்தான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) கருகம்பனை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை-08 மணி முதல் பிற்பகல்- 01.30 மணி வரை மேற்படி இரத்ததான முகாம் இடம்பெறும்.

நாளைய தினம் அரசாங்கத்தால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருதிக் கொடையாளர்கள் இரத்த வங்கி பதிவுப் புத்தகத்தை வீதிப் பாஸ் அனுமதியாகப் பயன்படுத்த முடியுமென இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் போக்குவரத்து உதவி தேவைப்படும் குருதிக் கொடையாளர்களுக்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்து தரப்படுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து உதவி தேவைப்படுபவர்கள் 0773241755, 0772988917 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குருதிக் கொடையாளர்கள் முன்வந்து இரத்ததானம் வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

{செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்}

Related posts

மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

World News

இளவரசர் குடும்ப விவகாரம்: அரசி இன்று அவசர ஆலோசனை

World News

சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்கக் கோரி யாழ்.நகரில் இன்று போராட்டம்

TamilTwin