fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

உள்ளுராட்சித் திணைக்களங்களிடம் யாழ்.வணிகர் கழகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

பண்டிகைக் காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டாமென யாழ். வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆர்.ஜெயசேகரன் உள்ளூராட்சித் திணைக்களங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jeyasekaran Commercial Jaffna

பண்டிகை காலங்களில் தென்னிலங்கை வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகள் வட பகுதியில் அதிகரித்துள்ளமை தொடர்பாக இன்றைய தினம்(02) கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்டிகைக் காலங்களில் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் வட மாகாணத்திற்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதனைத் தடை செய்ய மாகாண சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியிருந்தோம்.

இதற்கும் மேலாக சில சட்டவாக்க நடவடிக்கைகளும் வகுக்கப்பட்டு அனைத்து உள்ளூராட்சித் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிவுறுத்தலின் படி உள்ளூராட்சித் திணைக்களங்கள் செயற்பட வேண்டும்.

ஏனெனில், உள்ளூர் வர்த்தகர்கள் வரி செலுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டத்திலிருந்து வரும் வர்த்தகர்கள் நிரந்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் வட பகுதி வர்த்தகர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related posts

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்! இராணுவ தளபதி

World News

கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்த இலங்கைப் பெண்

World News

24 வருஷமா என்னை விட்டுப் பிரியாத கணவருக்கு என்ன நடந்தது?: யாழ். கெருடாவில் பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம் (Video, Photos)

TamilTwin