fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

உலகளவில் சாதனை படைத்த ரௌடி பேபி

மாரி படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டு வெளியானது, இதில் தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார், அந்தப்படம் வெற்றிப்படமாக இருந்ததை ஒட்டி அதன் இரண்டாம் பாகத்தை தனுஷ், ரௌடி பேபி சாய்பல்லவி நடிப்பில் மாரி-2 வாக இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். முதல் பாகத்தை இயக்கியவரும் இவர்தான்.

தனுஷ் படத்தில் சிறப்பான விஷயம் என்னவென்றால் படம் வெளியாகும் முன்பே பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துவிடும். தனுஷ் ரசிகர்கள் மட்டும் அல்லாது எல்லோர் வாயாலும் முனுமுனுக்கும் முதல் பாடல் அதுவாகவே இருக்கும்.

உலகளவில் சாதனை படைத்த தமிழ்ப்பாடல்

2012 ல் வெளியான படம் மூனு, இந்த படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தனர் இதனை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக  அளவில் எல்லோரும் பாடும் பாடலாக சாதனை படைத்தது.

இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தனுஷின் வேறு ஒரு பாடல் வந்துவிட்டது, ஆம் ரௌடி பேபி சாங்க் 25 கோடி பார்வையாளர்களை படம் வெளியான 45 நாட்களில் பெற்றுவிட்டது. உலகளவில் சாதனை படைத்த தமிழ் சினிமாப் பாடல் இதுவாகவே இப்போது உள்ளது.

Related posts

விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்வாதி

TamilTwin India

வில்லனாக மாறும் இயக்குநர் வெங்கட் பிரபு

N N

மாற்றுத்திறனாளிகளை சந்தித்த இயக்குனர் ரஞ்சித்

TamilTwin India