fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் கவிதை உலா

உன்னத தியாகியின் நினைவுகளைச் சுமந்து….

உன்னை எம் இதயக் கோயிலில் இருத்தி
நித்தமும் ஆராதிக்கின்றோம்
நினைவேந்தலுக்குத் தடை போட்டு
ஒன்றும் செய்ய முடியாது!
எத்தனை தடை உத்தரவுகள் போட்டாலும்
உன் தியாகத்தை அழிக்க முடியாது!

அகிம்சையின் பிறப்பிடமே!
தியாகத்தின் திருவுருவே திலீபன் அண்ணா….
சிந்தையெல்லாம் உன் நினைவாக
உன் உன்னத தியாகத்தை
இந்நாளில் நினைத்துப் பார்க்கின்றோம்

விடியலுக்கான காலம் வினாவாகத் தொடர்கின்ற போதிலும்
உன்னைப் போன்றோரின் உத்தம தியாகங்கள்
எம்மண்ணில் இன்னும் உயிர்ப்புடன்….
மாறாத கொள்கைப் பற்றுறுதியுடன்
உந்தன் வழியில் நாமும்
உன்னத இலட்சியங்கள் நிறைவேறும் காலத்திற்காய்!

{கவியாக்கம்:- ‘குறிஞ்சிக்கவி’}

Related posts

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

World News

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் கருணா அம்மான்!

World News

முட்டையின் விலையில் மாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்

World News