fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

பிரதமர் உதவித்தொகைத் திட்டம் மக்களை சென்றடையுமா?

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு வருடம் ஆறாயிரம் வழங்கப்படும் என நமது பிரதமர் மோடி உதவித்தொகைத்திட்டம் அறிவித்து அதன் முதற்கட்டத்தை நேற்று துவங்கி வைத்தார். மேலும் கோரக்பூரில் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் இந்தத் திட்டத்தால் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றார்.

வருடத்திற்கு ஆறாயிரம் என்றால் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் கணக்கு, ஒரு மாதத்திற்கு. ஒரு குடும்பத்திற்கு ஐநூறு ரூபாய் எப்படி மக்களின் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கும் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும், இது ஒரு சிறு உதவியாக இருக்கும் என மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

பிரதமர் உதவித்தொகைத் திட்டம் மக்களை சென்றடையுமா

ஆனால் இந்த உதவித்தொகைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

இந்த தொகை தவணைமுறையில் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படும், அதுவும் வங்கிக்கணக்கில் மட்டுமே. ஆனால் வங்கியின் பணபரிவர்த்தனை பற்றி தெரியாத படிக்காத ஏழைமக்களுக்கு இதனை பெறுவது மிகக்கடினமானது.

இந்த சூழலை சரியாக பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்யும் சிலர் பணத்தை வங்கியில் இருந்து பெற்றுக் கொடுப்பதாக கூறி கமிஷன் கேட்பர், இதனால் முழுத்தொகையும் கட்டாயம் மக்களைச் சேர வாய்ப்பில்லை.

இது மட்டுமல்லாது வங்கி கணக்கில் போதுமான அளவு இருப்புத்தொகை இல்லையெனில் வங்கியிலே பிடித்துக்கொள்வார்கள். இந்த உதவித்தொகை முழுதும் மக்களை சென்றடைய அரசு வழிமுறை செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Related posts

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!

World News

தமிழர்கள் மேல் அனுதாபம் கொண்டிருப்பது பிழையில்லை: புலிகளை ஆதரிப்பது தவறு!- மலேசிய அதிகாரிகள்

World News

வெளியிடங்களிலிருந்து வரும் நபர்களால் சீரழிவு! தடுத்து நிறுத்த வீதிக்கு இறங்கிய இளைஞர்களுக்கு கடும் மிரட்டல்: யாழில் பதற்றம்!! (Video, Photos)

TamilTwin