fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதி கோரி யாழில் மக்கள் எழுச்சிப் போராட்டம்

ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதி கோரி மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றினை எதிர்வரும்-16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ்பேசும் மக்களினை அலைகடலெனத் திரண்டு வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுளளதாவது,

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன . அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத் தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களிற்கு எதிரான இனச் சுத்திகரிப்பாகவே உள்ளது . அத்தகைய இனச்சுத்திகரிப்பின் உச்சமே  இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் வாழத் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு , போர்க்குற்ற மீறல்கள் , மனித உரிமைச் சட்ட மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்களிற்குரிய பரிகார நீதியினை சர்வதேசம் தமிழ் மக்களிற்குப் பெற்றுத்தர நாம் விழிப்போடு மக்கள் எழுச்சிப் போராட்டங்களினைமுன்னெடுக்க வேண்டும்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் 2015ல் முன்மொழியப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கு ஊடான உள்ளக பொறிமுறைகளினையே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிய நிலையிலும் ஏற்கனவே கால அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையிலும் மீண்டும் கால அவகாசமே வழங்கப்படவுள்ளது . இதனை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியினை கோரி மக்கள் எழுச்சிப் போராட்டமொன்றினை எதிர்வரும் 16.03.2019 முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். 

எனவே, நீதி கோரி  இடம்பெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் மக்களினை அலைகடலெனத் திரட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு பொது அமைப்புக்கள் மற்றும் மதகுருமாரை வேண்டிக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை.

Related posts

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

World News

யாழில் இன்று பேரெழுச்சியுடன் எழுகதமிழ்!

TamilTwin

பல எதிர்ப்புக்களையும் தாண்டி வைத்தியசாலை சென்று இரத்ததானம் வழங்கிய யாழ்.ஏழாலை இளைஞர்கள்: பாராட்டிய தெல்லிப்பழை இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி (Photos)

TamilTwin