இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்குமென மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் மாற்று வழிகள் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கமைய நேற்று முன்தினம் முதல் மின்சார விநியோகத் துண்டிப்பு நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.
இதற்கமைய நாளாந்தம் பகல் மூன்று மணித்தியாலங்களும், இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலமுமாக நாளாந்தம் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.