இலங்கையில் மின்சாரத் துண்டிப்பு இம்மாத நடுப்பகுதி வரை நீடிக்குமென மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சுத் தெரிவித்துள்ளது.அவசர மின் கொள்ளளவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்துண்டிப்புத் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் உயரதிகாரியொருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இது திட்டமிட்டதொரு நடவடிக்கை அல்ல என சபையின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி கட்டமைப்பின் சமநிலையைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.