fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இன்று முதல் உச்சம் தொடும் வெப்பம்!

இன்று வெள்ளிக்கிழமை(05) முதல் எதிர்வரும்- 15 ஆம் திகதி வரை இலங்கையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பகுதிகளிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பல நாட்களாக நிலவி வந்த வெப்பமுடனான காலநிலை காரணமாக வறட்சிப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பல பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே வளிமண்டலவியல் திணைக்களம் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூக அந்தஸ்தை உருவாக்குவதும் அவசியம்!

World News

இம் முறை 20 ஆசனங்களை பெற உத்தேசித்துள்ளோம்

World News

இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- {15.02.2020}

TamilTwin