எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 10 ஆம் திகதி முதல் இலங்கையில் அசாதாரண மின் தடை ழுமுமையாக நிறுத்தப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும்-10 ஆம் திகதி முதல் மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான பொறுப்பை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்.
பாவனையாளர்கள் மின்சாரத்தை மட்டுப்படுத்திப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, வரட்சியான காலநிலை காரணமாக இலங்கையில் மின்தடை ஏற்பட்டு இன்றுடன் 19 நாட்களாகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.