fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

இரண்டு மாதங்களின் பின் யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வழிபாடு (Video, Photos)

கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம்(26)வெகுவாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு மாதங்களின் பின்னர் நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. இதேபோன்று யாழ். மாவட்டமும் வழமைக்குத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அம்பிகைக்கு உகந்த நன்னாளை முன்னிட்டு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(26) இரண்டு மாதங்களின் பின்னர் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவது வழமை.எனினும், கொரோனாத் தொற்றுக் காரணமாக ஏனைய ஆலயங்களைப் போன்று இவ்வாலயத்திலும் அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் வெகுவாகத் தளர்த்தப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல் நாளிலேயே பல எண்ணிக்கையான அடியவர்கள் துர்க்காதேவியைத் தரிசித்து அவளருள் பெற வேண்டுமென்ற ஆவலுடன் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

எனினும், அடியவர்கள் சமூக இடைவெளியைப் பேணி பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டமையையும் காண முடிந்தது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}

Related posts

கொரோனா பீதி: பொருள்களை வாங்க படையெடுக்கும் மக்கள்: எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் அலைமோதும் கூட்டம்

World News

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பொரிஸ்! குழந்தைக்கு சூட்டவுள்ள பெயர் என்ன?

World News

பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ள விடயம்

World News