fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

அதிமுகவுக்கு இரட்டை இலை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இரட்டை இலை தொடர்பாக எழுந்த மோதலுக்கு கடைசி கட்டமாக இன்று தீர்ப்பு வெளியானது, பல மாதங்களுக்கு பிறகு, மேல்முறையீட்டின் மூலம் அதிமுகவின் ஒ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிக்கு இந்த இரட்டை இலைச்சின்னம் கிடைத்துள்ளது.

எம்.ஜி.ஆரால் வழிநடத்தப்பட்டு, ஜெயலலிதாவால் உச்சநிலையை அடைந்த கட்சி அதிமுக. அதிமுக என்று அடையாளம் காட்டப்பட்டதைவிட இரட்டை இலை என்றே பெரிதும் மக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஒரு அணியில் சசிகலா தரப்பினரும் மற்றொரு அணியில் ஒ.பி.எஸ் தரப்பினரும் அதிமுகவின் செல்வாக்குமிக்க இச்சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக இருந்தனர்.

அதிமுகவுக்கு இரட்டை இலை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இச்சின்னம் தங்கள் அணிக்கு வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார், தேர்தல் ஆணையம் பன்னீர் செல்வம் அணிக்கே இச்சின்னத்தை ஒதுக்கியது. இந்நிலையில் சசிகலா, தினகரன் தரப்பினர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

சசிகலா, தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும்  ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பில் முகுல் ரோகத்கி வாதிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை என தீர்ப்பு டெல்லி ஐகோர்ட்டில் இன்று வெளியானது. இத்தீர்ப்பையொட்டி அத்திக்கடவு அவினாசி அடிக்கல் நாட்டுவிழாவில் இருந்த முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையமாகும் மாங்குளம் வைத்தியசாலை!

SL News

பாதீட்டை எதிர்க்கக் காரணம் இதுதான்: நல்லூர் பிரதேச சபையில் கெளசலா காட்டம் (Video)

N N

காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவி விலகுகின்றார் மஹிந்த!

World News