fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

இரங்கராஜாவுக்கு பொன்னாலையில் உணர்வுபூர்வ அஞ்சலி (Photos)

ஒன்றிணைந்த வடக்கு– கிழக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் இரங்கராஜாவுக்கு பொன்னாலை கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை(27) பிற்பகல் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இ.உமணகேனன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் அமரர் இரங்கராஜாவின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளும், பல்துறை சார்ந்தவர்களும், பொதுமக்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து பொன்னாலை பிள்ளையார் ஆலய அர்ச்சகர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்களான ஸ்ரீ சற்குணராசா, வி.பி.சிவநாதன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் எஸ்.கிருஷ்ணானந்தன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ். மகாலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுத் தலைவர் தி.கிருபாகரன், வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவை) பொ.சண்முகானந்தன், வடமாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர் க.கஜேந்திரன், வடமாகாண சபை உத்தியோகத்தர் ஸ்ரீ.யோகராசா, வலிகாமம் கல்வி வலய முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.சந்திரபாலன், ஆசுகவி சிவசுப்பிரமணியம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபர் தி.மோகனபாலன், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய பரிபாலன சபைச் செயலாளர் இ.துரைராசா, வலி.மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா ஆகியோர் அஞ்சலி உரைகள் ஆற்றினர்.

அமரர் இரங்கராஜாவின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி த.அஞ்சனன் நிறைவுரை நிகழ்த்தினார்.

அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் அமரர்- இரங்கராஜாவிடம் கண்ட ஆற்றல், ஆளுமைகள், அவரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ்மக்களின் எதிர்காலம் தொடர்பாக அவர் கொண்டிருந்த கனவு, தமிழ்மக்களுக்கான அரசியல் தலைமைகள் தொடர்பாக இரங்கராஜா கொண்டிருந்த எண்ண வெளிப்பாடுகள், அரசியல் தலைமைகளை நேரிய திசையில் கொண்டு செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகள் போன்ற பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தனர்.

இதேவேளை, சுகவீனம் காரணமாக கடந்த- 15 ஆம் திகதி கொழும்பில் காலமான அமரர்- இரங்கராஜாவின் பூதவுடல் பொன்னாலைக்கு கொண்டு வர முடியாத நிலையில் கொழும்பு கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத பெருமளவான மக்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{எஸ்.ரவி}

Related posts

இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- {08.02.2020}

TamilTwin

யாழில் திடீர் மழை (Photos)

TamilTwin

கொரோனாவை கட்டுபடுத்தும் மத்திய நிலையத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா

World News