fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இன்று முதல் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு: இலங்கை மின்சார சபை அறிவிப்பு

இன்று திங்கட்கிழமை(25)முதல் நாளாந்தம் காலையிலும், மாலையிலும் சில மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த மின்வெட்டு சுழற்சி முறையில் அமுலிலிருக்கும்.

Electricity-board-sri-lanka

இதன்படி, காலை 8.30 மணி முதல் முற்பகல்- 11.30 வரையும் அல்லது முற்பகல் 11.30 முதல் பிற்பகல்-02.30 மணி வரையும், பிற்பகல் 2.30 இலிருந்து பிற்பகல்-05.30 வரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இரவு வேளை மாலை- 06.30 மணியிலிருந்து 07.30 மணி வரையும் அல்லது 07.30 மணி முதல் 08.30 மணி வரையும் அல்லது 08.30 மணியிலிருந்து 09.30 மணி வரையும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறையிலிருக்கும்.

நாட்டின் மின்சாரத் தேவை அதிகரித்துள்ள நிலையில் மின் விநியோகம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் கருத்தில் கொண்டே மேற்படி முடிவை இலங்கை மின்சார சபை எடுத்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து இலங்கையை பாதுகாக்க முன் வந்த சீனா!

World News

கடற்தொழிலை புறக்கணிக்கும் வடமராட்சி மீனவர்கள்

World News

ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வான சஜித்: மகிழ்ச்சியில் விக்னேஸ்வரன்!

TamilTwin