fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வீதியில் இறங்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வலியுறுத்தல்

நாம் ஊமையாக இருக்கும் வரை உலகம் செவிடாகத் தானிருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எமக்கான நீதியை வேண்டி வீதியில் இறங்கிப் போராடாமல் வீட்டுக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு “எமக்கு நீதி வேண்டும்” எனக் கூக்குரலிட்டால் ஒருபோதும் நீதி கிடைக்காது. இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டுமென கேட்பதற்கு நாம் வீதியில் இறங்கிப் போராடுவது அவசியமானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.திவாகர் வலியுறுத்தியுள்ளார்.

“ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனித உரிமை நகர்வும்” எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்றுப் புதன்கிழமை (06) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்களுக்கு நீதியை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் மாத்திரமின்றி சர்வதேசமும் பின்னிற்கின்றது என்று தான் கூற வேண்டும்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையானது மனிதவுரிமைகள், மனிதாபிமானச் சட்டங்களைப் பாதுகாக்கின்றது என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்துக்கு வெறுமனே சிறியதொரு அழுத்தத்தை வழங்கவே இந்தத் தீர்மானத்தின் மூலம் விளைகின்றது. தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைகளை மேற்கொண்டு தமிழ்மக்களுக்குரிய தீர்வைப் பெற்றுத் தருவதில் அக்கறையற்றே இருக்கின்றது. இதனை நாம் கடந்த- 2015 ஆம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தை நோக்குகின்ற போது விளங்கிக் கொள்ள முடியும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட ஆட்சி மேற்குலகத்திற்கு எதிரானதாக காணப்பட்டமையால் மேற்குலகம் இலங்கை அரசைத் தண்டிப்பதில் கரிசனையுடன் விளங்குகின்றது. ஆனால், அதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மேற்குலகுக்குச் சாதகமாக காணப்பட்டமையால் அவர்கள் மனித உரிமை நிலைப்பாட்டில் தளர்வுப் போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

அத்தகைய தளர்வுப் போக்கு கடந்த- 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 தீர்மானத்தின் மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கான கால அவகாசம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கானஅலுவலகம் மற்றும் இழப்பீட்டு நிவாரணம் போன்ற 25 விடயங்கள் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டன. ஆனால்,அந்தப் பரிந்துரைகளில் எதனையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.

கடந்த- 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜெனீவாவில் தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற போது இரண்டு வருட கால அவகாசம் வழங்கினார்கள். பின்னர் 2017 மார்ச் மாத்தில் அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கினார்கள். அத்தகைய கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் இலங்கை உரிய பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறியது.

இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்க முற்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான கால அவகாசத்தை வெறுமனே ஒரு கண் துடைப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

இலங்கையில் தமிழ்மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சரியானதொரு நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர் சமூதாயம் முதலில் ஒரு தெளிவுக்குள் வர வேண்டும். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்கின்றதொரு சக்தியாக, போராட்டத்தை எமது கையிலெடுக்கின்றவர்களாக மாறாத வரை எமக்கான நீதியை நாம் ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

Related posts

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

TamilTwin

சீரற்ற வானிலையால் மட்டக்களப்பில் அதிகளவானோர் பாதிப்பு!! (Photos)

TamilTwin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மாலைதீவைச் சேர்ந்த நால்வருக்கு சிஐடி வலைவீச்சு

World News