fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இந்துசமயத்துக்கு எதிரான வன்முறைகள்: யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து இன்று சனிக்கிழமை(06) காலை யாழ். மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் மேற்படி போராட்டம் ஆலய வழிபாடுகளுடன் காலை-09 மணியளவில் ஆரம்பமானது.
மருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு இ. சுந்தரேஸ்வரக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மருதனார்மடம் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய அறநெறிப் ப்பாடசாலையின் பொறுப்பாசிரியரும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான என்.பி.ஸ்ரீந்திரன் தலைமையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்ட ஆரம்ப நிகழ்வில் இந்துத் துறவிகள் வரிசையில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத் தலைவர் சுவாமி சிதாகாசானாந்த சுவாமிகள், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் செயலாளர் சிவஸ்ரீ ஈசான சக்தி கிரீவன், யாழ்ப்பாணம் ஸ்ரீசாயி குருசேஸ்திர முதல்வர் வணக்கத்திற்குரிய சாயி மாதா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து இந்துக் குருமார் மற்றும் இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளினது உரைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கினறன.

இன்றைய அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து மக்கள், இந்து அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Hindu-Fasting-in-Jaffna3 அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Related posts

பிரதமருக்கு சிவசேனை அமைப்பின் தலைவர் பாராட்டு!

TamilTwin

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

World News

சுழிபுரத்தில் கூட்டமைப்பின் மீது தாக்குதல்!

World News