ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா நடிப்பில் “இந்தியன்” படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்தது, அது இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த படமாகும்.
23 வருடத்திற்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட ஷங்கர் கமல்ஹாசனை அணுகினார். இந்த வெற்றிக் கூட்டணி படம் எடுக்கும் வேலைக்கு ஆயத்தமானது. நடிகையாக காஜல் அகர்வால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அனைத்தும் சரியாக நடந்தபொழுதும் இந்தப் படத்தில் பல வதந்திகள் வந்து கொண்டு இருந்தன. முதலாவதாக கமல்ஹாசனுக்கு போட்ட மேக் அப் சரி இல்லை என்று பிரச்சினை வந்தது.

அதனை சமாளித்து இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்தவேளையில் ஷங்கரின் பட்ஜெட் அளவு தயாரிப்பாளருக்கு கட்டுபடியாகவில்லை அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது என வதந்திகள் வந்தது.
ஆனால் இப்போது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார், அதனால் தேர்தல் நெருங்கிவரும் இந்தக்கால கட்டத்தில் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் படவேலைகள் மீண்டும் தாமதம் ஆகும் என சர்ச்சைகள் மீண்டும் வெளியாகியுள்ளது.
இந்தப்படம் முடிந்து திரைக்கு வரும்வரை சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் ரசிகர்களிடையே இந்தப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்பதில் ஐயமில்லை.