fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

வீட்டிலேயே செய்யலாம் இத்தாலிய பாஸ்தா

Italian Pasta Recipe in Tamil

     விதவிதமாக சமைக்க வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவார்கள்.  ஆனால் அவர்களுக்கு விதவிதமான உணவுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியாது.  அதற்கான ஒரு சிறு உதவியாக இத்தாலிய பாஸ்தாவினை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்பினை இங்கு காணலாம்.

பாஸ்தா இதுவும் ஒரு வகை டிபன் தான் குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக வழங்கலாம். 

வீட்டிலேயே செய்யலாம் இத்தாலிய பாஸ்தா

Italian Pasta - இத்தாலிய பாஸ்தா

வீட்டிலேயே செய்யலாம் இத்தாலிய பாஸ்தா வீட்டிலேயே செய்யலாம் இத்தாலிய பாஸ்தா Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • பாஸ்தா– 2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 2 பல்
  • இஞ்சி - 1 துண்டு
  • வெங்காயம் – 2
  • தக்காளி - 4
  • கேரட் - 1/2 கப்
  • குடை மிளகாய் –1/4 கப்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

Instructions

செய்முறை: ஒரு கடாயில் தண்ணீரை சுட வைத்து அது நன்றாக கொதித்தது வந்ததும்  உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தாவை  சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும், அதனை தனியாக வடிகட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்.  இவை நன்றாக வதங்கியதும் தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.  அதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ள வேண்டு. இவை அனைத்தும் நன்றாக வதங்கி வந்ததும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார்.

 

    

Related posts

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட்

N N

சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம்!!

TamilTwin India

கொழுப்பைக் குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

N N