fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

இஞ்சியின் அற்புதமான நன்மைகள்

இந்த தலைப்பை பார்த்ததும் எங்களுக்கு விளங்குது… அட அடுத்த இஞ்சி தொடர்பான விபரமா என்று நீங்கள் கேட்பது. ஆனால் ஏன் திரும்பதிருப்ப இதை போடுறம் என்றால் எம்மவர்கள் தான் மிகவும் அதிகமா நெஞ்சு மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றாuகள்…. ஆகவே இதை வாசிப்பதோடு நிற்காது உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் இஞ்சியையும் சேர்த்து உடல் நலத்தோடு வாழுங்கள். சரி இனி உள்ள போவம்….

Ginger for Medicine

இஞ்சி நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருளாகும். அது பார்ப்பதற்கு மஞ்சள் போல் இருக்கும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றின் பயனை பற்றி திரிகடுகம் கூறியுள்ளது.  எனவே தினமும் நாம் நம் உணவில் இஞ்சியை சேர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி ஒரு அரியவகை மருந்து பொருள் ஆகும். அவற்றின் பயன்களை காண்போம்.

முடி உதிர்வை எப்படி தடுக்கலாம் ? அனைவருக்கும் அழகு முடி தான். முடி உதிர்வதை தடுப்பதற்கு பல வழி முறைகள் உண்டு. அதில் இஞ்சியும் பெரும் பங்கினை கொண்டுள்ளது.  

இஞ்சி சாறு தலையில் ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். முடியின் வேர்களை பலப்படுத்தும். அடர்த்தியான கூந்தல் வளர செய்யும் தலையில் முன் பகுதி முடி உதிர்வை மற்றும் சொட்டை ஆகுவதை  தடுக்கும்:

மென்மையான கூந்தல் வளர இஞ்சி சாறுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தடவி 15 நிமிடம் ஊறவைத்து வாரம் ஒரு முறை குளிக்க வேண்டும்.

இஞ்சி சாறு சிறிது அளவு எடுத்து ஜோஜோபா எண்ணெய் கலந்து தேய்த்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.

பொடுகு தொல்லை அதிகம் இருந்தால் முடி உதிர்வு அதிகம் ஏற்படும். முகத்தில் பருக்கள் அதிகம் வரும்.  பொடுகு தொல்லை நீங்க இஞ்சி சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி குளிக்க வேண்டும். இஞ்சியில் கார தன்மை அதிகம் உள்ளதால் பொடுகு விரைவாக நீங்கி விடும்.  சிறிது அளவு இஞ்சி சாறு தான் கலக்க வேண்டும்.

இஞ்சி சாறு 5 சொட்டு எள் எண்ணெய் 5 சொட்டு கலந்து முடியில் அரை மணி நேரம் ஊற வைத்து வாரம் ஒரு முறை குளித்தால் சொட்டை ஆகுவது தடுக்கப்படும். இஞ்சியை நன்கு அரைத்து அந்த சாறுடன் எலும்பிச்சை சாறு கலந்து வாரம் இரு முறை குளித்தால் முன் தலையில் உள்ள முடி உதிர்வதை தடுக்கலாம்.

காரம் தன்மை அதிகம் கொண்டது இஞ்சி. அது போல வெங்காயமும் அதிக காரம் கொண்டது.  இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து சாற்றினை முன் நெற்றியில் தடவி குளித்தால் முடி வேகமாக வளரும்.

இஞ்சியின் மற்ற பயன்கள்:  

உடல் வலி குணமாக:

நாம் கடுமையாக வேலை செய்வதால் உடலில் உள்ள தசை பிடித்து உடல் வலி ஏற்படுகிறது. அந்த வலி சரி ஆக  ஐந்து நாட்கள் ஆகும். நம் உணவில் இஞ்சியை சேர்த்து கொண்டால் வலி குணமாகிவிடும்.

மூளை மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க:

தினமும் இஞ்சி உணவில் சேர்ப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்வதற்கு பயன்படும். மேலும் தொடர்ந்து இஞ்சியை பயன்படுத்தி வந்தால் ரத்த அடைப்பு ஏற்படாது. ரத்தம் சீராக செல்வதால் மூளை நன்றாக வேலை செய்யும். இதனால் மூளை தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். மாரடைப்பு வராமல் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நம் முன்னோர்கள் போல நாம் ஆரோக்கியமான உணவு உண்ணாததால் நமக்கு உடல் ஆரோக்கியமாக இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி  மிகவும் குறைவாக உள்ளது. தினமும் சிறிதளவு இஞ்சியை பாலில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வயிற்று வலி குணமாக:

இஞ்சியின் மருத்துவ பயன்கள் பல இருப்பினும் அதில் மிக முக்கியமான ஒன்று வயிற்று வழியை குணமாக்குவது ஆகும்.  நம்மில் பலருக்கு செரிமானம் சரியாக இல்லாததால் வயிற்று வலி ஏற்படுகிறது. இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் செரிமானம் நன்கு ஆகும்.

உடல் இடை குறைக்கும் :

உடல் இடை அதிகம் உள்ளவர்கள் இடையை குறைத்து அழகாக இருக்க ஆசை படுவார்கள். இடையை குறைக்க பல வலி முறைகள் உண்டு. அது அனைத்தையும் செய்து பார்ப்பார்கள்.  ஆனால் விரைவில் உடல் இடையை குறைக்க இஞ்சி பயன்படும். இஞ்சியை மோருடன் கலந்து குடித்தால் தேவை அற்ற கொழுப்பு நீங்கும். மேலும் செரிமானம் ஆக உதவுவதால் உடல் இடை விரைவாக குறைகிறது.

உடல் அழகினை அதிகரிக்கும் :

இஞ்சி சர்ம பிரச்சனைகளை சரி செய்ய உதவும். தோளில் ஏற்படும் காயங்கள், சர்ம பிரச்சனைகள் சரி ஆக உதவும். இஞ்சி சாரை பாலில் கலந்து குடித்தால் உடல் ஆரோகியம் அடையும், முகம் பொலிவு பெரும்.

எனவே மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட இஞ்சியை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகம் பொலிவு பெரும், செரிமான பிரச்சனை நீங்கும், மாரடைப்பு வராமல் தடுக்கும், முடி அடர்த்தியாக வளரும்.

Related posts

உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிமுறை!!

TamilTwin India

உங்கள் எடையை குறைக்க இந்த ஒரு பொருள் போதும்!

TamilTwin

சுவையான வாழைப்பழ குழிப்பணியாரம்!!

TamilTwin India