fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆர்யா - சாயிஷா திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சினிமா

ஆர்யா – சாயிஷா திருமண ஏற்பாடுகள் தீவிரம்

     நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர்.  இப்படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.  தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.  இருவருக்கும் இடையே 18 வருட வயது வித்தியாசம், இருப்பினும் யாரும் எந்த தடையும் சொல்லாமல் நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தனர்.  இந்த திருமண ஏற்பாடுகளில் அதிக தீவிரம் காட்டி வேலைகள் அனைத்தையும் முடித்து வருகிறார் நடிகர் ஆர்யா.

     ஆர்யா சாயிஷா திருமணம் மார்ச் மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் ஆர்யா தனது திருமண அழைப்பிதழை தனது நண்பரும் நடிகருமான விஷாலுக்கு நேரில் சென்று வைத்து திருமணத்திற்கு அழைத்து இருக்கிறார்.  இது குறித்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்யா திருமண அழைப்பிதழை விஷாலுக்கு கொடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.  அதில் இப்புகைப்படம் “எனக்கு மிகவும் நெருக்கமான புகைப்படமாக மாறிவிட்டது.  என் நண்பன் அவனது திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷா காதலோடு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி உள்ளார்”.

Related posts

கதாநாயகியான ஸ்ரீ ரெட்டி- அதிர்ச்சியில் ரசிகர்கள்

N N

நான் நடிகர் ஆனதற்கு காரணமே இவர் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான்!

TamilTwin India

சரக்கு அடிக்கும் போட்டோவை வெளியிட்டு போதை ஏத்தும் அமலா பால்…!

TamilTwin India