பல பெண்களின் கலாபாக் காதலனாக வலம் வந்தவர் ஆர்யா. இப்போது அந்த பெண்கள் எல்லாம் திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்று ஆண்ட்டி ஆகிவிட்டார்கள். அப்போது இருந்து தீவிரமாக பெண் தேடும் படலத்தை தொடங்கிய ஆர்யா இப்போ
பல பெண்களின் கலாபாக் காதலனாக வலம் வந்தவர் ஆர்யா. இப்போது அந்த பெண்கள் எல்லாம் திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்று ஆண்ட்டி ஆகிவிட்டார்கள். அப்போது இருந்து தீவிரமாக பெண் தேடும் படலத்தை தொடங்கிய ஆர்யா இப்போதான் முற்று புள்ளி வைத்து உள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டில் அதிர்வலைகள் செலுத்திய ஆர்யா, அதிலும் ஒரு முடிவுக்கு வர வில்லை.
இந்த காதலர்கள் தினத்தன்று, தன் திருமணம் இந்த மார்ச் மாதத்தில் சாய்ஸ்ஷா உடன் நடக்க இருப்பதாக இருவரும் அறிவித்தார்கள். அவர் வெளியிட்ட செய்தி –
காதலர்கள் தின வாழ்த்துகள்..
“பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் ஆசிர்வதோடு, எங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாளை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறோம்,இந்த மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறோம், உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களின் வாழ்க்கை ஒற்றுமைக்கும் சந்தோஷத்திற்கு வேண்டும். “
ஆர்யா சாய்ஸ்ஷா.
என்று இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டார்கள். இருவரும் ஒரே வாக்கியத்தை ஒரே நாளில் வெளியிட்டு, காதலர் தினத்தில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள். கஜினிகாந்த் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.இவர் இன்னும் பல முன்னனி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.
அனைவரின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று அந்த செய்தியில் பதிவிட்டுள்ளார். ஆனால், சாய்ஸ்ஷா வின் தாயாரை, ஷாஹீன் பானுவை தொடர்பு கொண்டு பேசிய போது, இது நிச்சயமாக காதல் திருமணம் கிடையாது.பெற்றோர்கள் ஆசைப்பட்டதின் பெயரில்,பெரியவர்கள் கலந்து பேசி நிச்சயம் ஆன திருமணம் ஆகும். அவர்கள் டேட்டிங் என ஊர் சுற்ற இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்து விட்டார் ஷாஹீன் பானு.
எது எப்படியோ பிலே பாய்க்கு கால் கட்டு போட்டாச்சு!! கல்யாணத்துக்கு பச்சை கொடி கட்டியாச்சு… என்று நண்பர்கள் கலாய்க்க, ரசிகர்கள் வாழ்த்த, திருமணத்திற்கு ரெடி ஆகிறார்கள் ஆர்யா சாய்ஸ்ஷா தம்பதிகள்.