fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சுப் பழத்தோல்

     நமது சருமத்தினை பாதுகாப்பதில் ஆரஞ்சுப் பழத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.  வைட்டமின் சி தவிர ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவில் நிறைந்து இருப்பதால் இது நமது சருமத்தினை பாதுகாத்து சருமப் பொலிவினை அதிகரிக்கிறது.  எண்ணெய் பசை மிகுந்த சருமத்தினை உடையவர்கள் ஆரஞ்சுப் பழத்தோலினை பேஸ் பேக் போல் பயன்படுத்தலாம்.

சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சுப் பழத்தோல்
சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சுப் பழத்தோல்

     ஆரஞ்சுப் பழத்தோல் மற்றும் தயிர் சேர்ந்த கலவை நமது சருமத்தினை பாதுகாக்க உதவுகிறது.  இது ஒரு அற்புதமான கலவை ஆகும்.  இதன் மூலம் முகச் சுருக்கங்களை நீக்கி பொலிவான சருமத்தினைப் பெறலாம்.  நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு உதவுகிறது. 

     ஆரஞ்சுப் பழத்தோலினை வெயிலில் காய வைத்து அதனை பொடி செய்து, தயிருடன் சேர்த்து தினமும் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வர முகப் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். 

     ஆரஞ்சுப் பழத்தோலுடன் வேம்பினை கலந்து போடுவதன் மூலம் முகத்தில் பரு வருவதை தடுக்க இயலும்.

Related posts

முடி உதிர்வுக்கு குட்பை சொல்லும் உருளைக் கிழங்கு ஹேர்பேக்!!

N N

உங்கள் சருமத்தினை இளமையாக வைத்திருக்க உருளைக்கிழங்கு பேஸ்பேக்!!

N N

முகத்திற்கு மாஸ்க் போடுவது எப்படி

N N