fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கோடையில் அழகை எப்படி பராமரிப்பது என்ற பயமா?

இப்போது நாம் கோடையின் வெப்பத்தை அனுபவித்து வருகிறோம், கோடையின் தாக்கத்தால் முக்கியமாக தோல் மற்றும் முகத்தின் பொலிவில் மாற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் கடுமையான  வானிலைக்கு நாம் தயாராவோம். வெயிலின் தாக்கத்தில் அழகை எப்படி பராமரிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

குறிப்பாக முகத்தையும், முடியையும் முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பது எப்படி என பார்ப்போம்.

1. சன் ஸ்கிரீன் க்ரீம்கள்

கோடையில் சன்ஸ்கிரீன் க்ரீம்கள் கட்டாயம் உங்கள் கைப்பையில் இருக்க வேண்டும். நீங்கள் வெளியே செல்வதற்கு 1 மணி நேரம் முன் உங்கள் தோல் மீது சன்ஸ்கிரீன் ஊறவைத்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும்.

கோடையில் அழகை எப்படி பராமரிப்பது என பயமா

2. பாதுகாப்பு தலைமுடி மாஸ்க் :

கோடை வெயில் உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும். சூடான காலநிலை உச்சந்தலையில் வியர்வையை ஏற்படுத்தும். எனவே உங்கள் முடியை பாதுகாக்க சிறந்த வழி ஒரு பாதுகாப்பு முடி மாஸ்க் பயன்படுத்துவது.

3. ஊட்டச்சத்து டோனர் :

இது உங்கள் தோலை வளர்த்து, மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

4. தோல் நிறமாற்றத்தை தடுக்கும் கிரீம்கள்

கோடையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெளியே சென்று வந்ததும் , உங்கள் தோலின் நிறத்தில் கட்டாயம் மாற்றம் காணப்படும். இதற்கான ஒரு சிறந்த தீர்வாக தோல் நிறமாற்றத்தைத் தடுக்கும் கிரீம்கள் இருக்கும்.

5. சுத்தப்படுத்தும் கிரீம்கள் (க்ளன்ஸர்) :

வெளியே சென்று வந்தவுடன் க்ளன்ஸர் வைத்து முகத்தை நன்கு கழுவி விட வேண்டும். இது முகத்தில் படிந்த தூசு மற்றும் வியர்வையை நன்கு சுத்தம் செய்து விடும்.

Related posts

கோடை கால வியர்க் குரு பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் போதும் சரி ஆகிடும்!!

N N

சுருள் முடியின் ஈரப்பசையினை அதிகரிக்கும் தேங்காய்ப் பால்!!

N N

கோடைக்காலத்தில் பெண்கள் அணிவதற்கு ஏற்ற உடைகள்

N N