fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

முடி உதிர்தலைக் குறைக்கும் குன்றிமணி

குன்றிமணி இந்தியாவில் உள்ள வெப்ப மண்டல காடுகளிலும், புதர்களிலும் காணப்படுகிறது.  இது இந்தியாவில் பண்டை காலத்தில் தங்கம் மற்றும் வைரங்களை எடை போடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

தோல் நோய்களை குணப்படுத்துவதற்கு குன்றிமணிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இதிலுள்ள இலைகள், வேர்கள், விதைகள் முதலியவை மருத்துவ குணம் கொண்டவையாக விளங்குகிறது. 

இதன் இலைகளை கசாயம் செய்து குடிப்பதால் இருமல், சளி மற்றும் குடல் வலியினை சரி செய்கிறது.  இதன் இலைச் சாறுடன் எண்ணெய் கலந்து வீக்கம் ஏற்ப்பட்ட இடங்களில் பூசி வருவதன் மூலம் நாளடைவில் விக்கம் குறையும்.

முடி உதிர்தலைக் குறைக்கும் குன்றிமணி

    நரம்புக் கோளாறுகளை சரி செய்வதற்கும் குன்றிமணி பயன்படுகிறது.  முடி வளர்ச்சியினை தூண்டுவதற்கும் இதனை பயன்படுத்துகின்றனர்.  இதன் விதைகளை மேல் பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி சரி செய்யப் பயன்படுகிறது.

  வெந்தயம் மற்றும் குன்றிமணியினை பொடி செய்து நல்லெண்ணெய்யில் ஊற வைத்து ஒரு வாரத்திற்கு தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது குறைந்து வளர்ச்சி அடைகிறது. 

Related posts

மொறுமொறு இனிப்பு சோமாஸ் செய்வது எப்படி?

N N

குழந்தைகளுக்கு ஏற்ற தித்திக்கும் நெய் சாதம்

N N

வரகு அரிசி பிரியாணி

N N