fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

இரத்த விருத்திக்கு அருகம்புல் பானம்

அருகம்புல் தெய்வீக மூலிகையாக கருதப்படுகிறது.  நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத சில வகை குறிப்பிட்ட நோய்களைக் கூட அருகம்புல் தீர்த்து நல்ல பலனை தருகிறது. 

இதய நோய்களையும், ரத்தக் குழாய் அடைப்பையும், ரத்த குழாய் பலவீனத்தையும் அருகம்புல் பானம் தீர்த்து வைக்கிறது.  அருகம்புல் அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது.  நீர்நிலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் எப்பொழுதும் காணப்படும். 

இரத்த விருத்திக்கு அருகம்புல் பானம்

     அருகம்புல் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் முதலிடத்தினை வகிக்கிறது.  அருகம்புல்லிற்கு ரத்தத்தினை சுத்தப்படுத்தும் சக்தி உள்ளது.  காலை எழுந்த உடன் அருகம்புல் சாறு தினமும் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி உடலில் உள்ள தேவையற்ற சதைப் பகுதி குறைந்து விடும். 

இரத்த மூலம் குணமாக அருகம்புல்லை பாலில் அரைத்து 30 நாட்கள் பருகி வர ரத்த மூலம் குணமாகும்.  புத்தி மந்தம் விலகுவதிற்கும் அருகம்புல் பானம் அருந்தி வர நல்ல மாற்றம் கிடைக்கும். 

Related posts

கருப்புக் கொண்டைக் கடலை குழம்பு

N N

உடல் வெப்பத்தைக் குறைக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி

N N

வீட்டில் இருட்டுக்கடை அல்வா செய்வது எப்படி?

N N