
சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினரால் நேற்று (14) கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சென்ரல் கேம் கிராமம் மற்றும் யாழ்.மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொரோனா நோயின் தாக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாகவாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சென்ரல் கேம் கிராமத்திலுள்ள 100 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், தென்மராட்சிப் பிரதேச செயலகததிற்குட்பட்ட 50 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்பே சிவம் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், இளம் விஞ்ஞானியுமான சோ.வினோஜ்குமார் கலந்து கொண்டு குறித்த உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் ஊடாக இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு மேற்படி பிரதேச செயலகம் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த-12 ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாடிய புலம்பெயர் தேசத்தைச் சேர்ந்த திருமதி- திலீபன் நிரோஜா சார்பாக அவரது குடும்பத்தினரும், அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரும் மேற்படி உலருணவுப் பொருட்களுக்கான நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

{பானு}