Tuesday, September 27, 2022
Homecorvid 19 virusஅம்பாறையில் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் சூரிச் சிவன்கோவில் நிர்வாகம்...

அம்பாறையில் நாளாந்த தொழில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் சூரிச் சிவன்கோவில் நிர்வாகம் (Video, Photos)

சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன்கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் கொரோனா அச்சத்தால் நாளாந்தத் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவு நிவாரணப் பணியின் ஒரு கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் புதிய வளத்தாப்பிட்டிள் கிராமம் மற்றும் பழவெளிக் கிராமம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய, கடந்த சனிக்கிழமை(04) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் 120 குடும்பங்களுக்கும், அதே மாவட்டத்தின் பழவெளிக் கிராமத்தில் 80 குடும்பங்களுக்கும் உலருணவு நிவாரணங்கள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, சுவிற்சர்லாந்து சூரிச் சிவன்கோவில் நிர்வாகத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வட- கிழக்கு மாகாணங்களில் நாளாந்தத் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவு நிவாரணப் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கு மக்களின் உடனடித் தேவையறிந்து பரவலாக உதவி வரும் சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் ஆலய நிர்வாகத்தைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

{பானு}

RELATED ARTICLES

Most Popular