fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு இந்திய உணவுகள்

அமெசான் காட்டிலிருந்து கிடைத்த கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.  அழுகும் நிலையில் இருக்கக் கூடிய புண்களில் கூட இதனை வைத்துக் கட்டுவதால் அப்புண்கள் விரைவில் குணமடைகின்றன.  இது முடி வளர்ச்சியினை தூண்டக் கூடியதாகவும் இருக்கிறது. 

தற்பொழுது தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பும் விளம்பரங்களில் வரும் பிருங்கராஜம் எண்ணெய் கரிசலாங்கண்ணி எண்ணெய் ஆகும்.  பிருங்கராஜம் என்பது இதன் மற்றொரு பெயர் ஆகும்.

அமெசான் காட்டிலிருந்து கிடைத்த கரிசலாங்கண்ணி

     இதற்கு பல வகைப் பெயர்கள் வழங்கப்படுகிறது.  அவை, ரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களும் இதற்கு உண்டு. 

கையாந்தகரை இலைகளை பல் துலக்கப் பயன்படுத்து வந்தால் பற்கள் உறுதியாகும்.  ஈறுகளில் ஏற்படக் கூடிய இரத்தக் கசிவு நீங்கும். 

பொன் நிற மேனியினைப் பெற கரிசலாங்கண்ணி பயன்படுத்தலாம்.  இதனை உணவாகவோ அல்லது மருந்தாகவோ பயன்படுத்தி வந்தால் அறிவு விருத்தி ஆகும்.  கையாந்தகரை சாறை தலைக்கு தடவி குளித்து வர இள நரை நீங்கும்.

Related posts

வறண்ட சருமப் பிரச்சினையா? கவலையே வேண்டாம்

N N

சளிக்கு எதிரி பனங்கற்கண்டு

N N

சத்தான டேஸ்ட்டியான பரங்கிக்காய் பாயாசம்!!

N N