நாட்டில் தற்போது நிலவி வரும் அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் மேமாதம் வரை தொடருமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமுடனான காலநிலை காரணமாக கை,கால், வயிற்றுப் பகுதிகளில் தசைகளில் வலி, இறுக்கம் என்பன ஏற்படலாம். அதிக வியர்வை, அதிக உடற் சோர்வு என்பவற்றால் மயக்கம் ஏற்படலாம். எனவே, அதிக வெப்பமான காலநிலை நிலவுகின்ற போது தேவையான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் நலனில் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க முடியுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி- ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.