fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அட்லியின் இயக்கத்தில் இணைகிறார் பிரபல அரசியல்வாதி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “தளபதி 63”.  படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெறுகிறது.  பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சண்டைக் காட்சிகள் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டது. அட்லியின் இயக்கத்தில் பிரபல அரசியல்வாதி இணையும் தகவல் வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படமாக்கி உள்ளது படக்குழு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த் ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அட்லியின் இயக்கத்தில் இணைகிறார் பிரபல அரசியல்வாதி

இவர்களுடன் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இத்திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

     தளபதி 63 படத்தினை ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புடவையில் கூட இம்புட்டு கவர்ச்சியா ! கிரனை கொண்டாடும் ரசிகர்கள்

TamilTwin India

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம் ‘இது தான் மரணத்திற்கு காரணமா’ திடுக்கிடும் தகவல்கள்

TamilTwin India

கன்னிமாடம் நாளை ரிலீஸ், வைரலாகும் ஸ்பாட்லைட் மேக்கிங் வீடியோ !

TamilTwin India